நானே என் தந்தைக்கு எமனாகிவிட்டேன் : கொரோனாவால் தந்தையை இழந்த மகனின் கண்ணீர்!!

866

தந்தையை இழந்த மகனின் கண்ணீர்..

சீனாவில் கொரோனாவுக்கு தனது தந்தையை பறிகொடுத்த மகன் கண்ணீர்மல்க நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். கொரோனாவின் பிறப்பிடமான வூஹானிலிருந்து 700 மைல் தொலைவில் வசிப்பவர் Zhang Hai.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தன்னுடைய 76 வயது தந்தையான Zhang Lifang-ன் சிகிச்சைக்காக வூஹானுக்கு வந்துள்ளார்.

அவர் வூஹானில் ஓய்வு பெற்றவர் என்பதால் இலவச சிகிச்சை கிடைக்கும் என்பதற்காக இந்நகரத்துக்கு விரைந்துள்ளனர்.

அச்சமயம் கொரோனா பரவி வந்த காலகட்டம் என்பதால், கடந்த ஜனவரி 30ம் திகதி Zhang Lifangக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு நாட்களிலேயே மரணமடைந்தார்.

இதனால் மனமுடைந்த போன Zhang Hai, ஊரடங்களிலேயே தன்னுடைய நாட்களை கழித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனாவின் தீவிரம் புரியாமல் என் தந்தையை சிகிச்சைக்காக அங்கு அழைத்து சென்றுவிட்டேன்.

மரணத்திற்காக என் தந்தையை அழைத்து சென்றது போன்ற உணர்வு, அதை நினைத்தால் என் மேலே எனக்கு கோபம் வருகிறது என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 76 நாட்களுக்கு பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார் Zhang Hai. எனினும் அவருடைய தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மீண்டும் வூஹானுக்கு வரவேண்டிய சூழலும் உள்ளது.