சென்னை…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்த, 64 வயது முதியவர் சிவா, கடந்த 2018 மார்ச் 4 ம் தேதி அங்கு வசித்து வந்த 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக. குழந்தையின் தாய் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குழந்தையின் தாய் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்படி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட முதியவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும்,
ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.