நான் எப்படி நடித்தாலும் கணவர் அதற்குத் தடையல்ல!!

655

நான் படங்களில் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தாலும், அல்லது நான் நிர்வாணமாகவே நடித்தாலும் என் கணவர் என்னை ஒன்றும் சொல்லமாட்டார் என பொலிவுட் நடிகை சுர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.அண்மையில் இடம்பெற்ற பேட்டியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எனக்குத் திருமணமாகிவிட்டது என்று அறிந்து மக்கள் ஏன் அதிர்ச்சி அடைய வேண்டும்? தற்போது பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் சாதித்துள்ளார்கள்.திருமணத்தையும், தொழிலையும் சேர்த்துப் பார்க்கக் கூடாது. பிற தொழில்களை போன்று தான் சினிமாவில் பெண்கள் திருணமத்திற்கு பிறகு வேலை செய்கிறார்கள்.

சரியான வயதில் திருமணம் செய்ய வேண்டும். அதை தான் நான் செய்துள்ளேன். நான் படங்களில் சக நடிகர்களை முத்தமிடலாம், நிர்வாணமாக நடிக்கலாம். அதை பார்த்து என் கணவர் எதுவும் சொல்லமாட்டார். அந்த அளவுக்கு என்னைப் புரிந்துவைத்துள்ளார். அப்படிப்பட்ட ஒருவர் கிடைத்துள்ளபோது நான் உடனே திருமணம் செய்தேன்.

என் கணவர் என் வேலையை ஆதரிக்கிறார். இப்படியொரு ஆதரவான கணவர் வேண்டும் என்று தானே அனைத்துப் பெண்களும் விரும்புவார்கள். என்னைத் தேடி நல்ல கதை வந்தால் அந்த படத்தில் நடிக்குமாறு கூறும் முதல் ஆளாக என் கணவரே தான் இருப்பார்” என்ற கூறினார்.

சுர்வீன் சாவ்லா தமிழில் ஜெய்ஹிந்த்-2 உட்பட 3 படங்களில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ரகசியமாகத் திருமணம் செய்து கொண்ட அவர் அதனை இதுவரைக்கும் வெளியிடவில்லை. அண்மையில் அவரது திருமணம் குறித்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.