பாஜகவை எதிர்த்து தொடர்ந்து பேசி வருவதால் தான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என தெரிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
பிரபல பத்திரிக்கையாளரும், தனது தோழியுமான கவுரி லங்கேஷ் கொலைக்கு பின்னர் தொடர்ச்சியாக மத்திய அரசை எதிர்த்து கருத்துகளை முன்வைத்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
இதனால் தான் பாலிவுட் படவாய்ப்புகளை இழந்ததாகவும் முன்னர் கூறியிருந்தனர்.இந்நிலையில் மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரகாஷ் ராஜ், பாஜக மற்றும் இந்து அமைப்புக்கு எதிராக பேசி வருவதால் என்னை கொல்ல சதி நடக்கிறது.
இதற்காக சில இந்து அமைப்புகள் திட்டம் தீட்டுகின்றன, நான் அஞ்சப் போவதில்லை, என்னுடைய உயிரை வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம்.
என்னுடைய அறிவு, நடிப்பு திறமையை யாராலும் எதுவும் செய்ய முடியாது, நல்லாட்சி என கூறிக்கொண்டு நாட்டில் குழப்பங்களை பிரதமர் மோடி ஏற்படுத்துகிறார்.
கர்நாடக தேர்தலில் மக்களாட்சி நடத்தும் நல்ல கட்சிகளுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.