போஸ்டர்…….
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
தங்களுக்கு பிடித்தமான அரசியல் தலைவர்களுக்கு ரசிகர்கள் போஸ்டர் அடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் நகரின் பல இடங்களில் நடிகர் விஜய் ரசிகர்கள், பெரிய அளவிலான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
அதில் எம்.ஜி.ஆர். படம் அருகே மக்கள் தளபதி விஜய் என குறிப்பிடப்பட்டு விஜய் படம் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த சுவரொட்டியில் ‘மக்கள் நலன் காக்க, மாணவர்களின் குறைகளை தீர்க்க, தமிழ்நாடு வேலை தமிழ்நாடு மக்களுக்கே கிடைத்திட நாடே எதிர்பார்க்கும் நாளைய முதல்வரே, உங்கள் ஆட்சிக்காக காத்திருக்கிறோம்’ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.