விஜய் டிவி பிரபலம்…
விஜய் டிவியிலிருந்து சிவகார்த்திகேயன், சந்தானம் உள்பட பல திறமையுள்ளவர்கள் வெள்ளித்திரையிலும் ஜொலித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் காமெடி நடிப்பால் பிரபலமாகி வரும் யோகி விரைவில் வெள்ளித்திரையிலும் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் யோகி காதல் திருமணம் செய்து கொண்ட செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் கலக்க போவது யாரு சாம்பியன்’ என்ற நிகழ்ச்சியில் ’நித்தியானந்தா’ போன்று ’ யோகி நடித்தது அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் காமெடி நடிகர் யோகி தற்போது காதல் திருமணம் செய்துள்ளர்.
நடிகர் யோகி தன்னுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த சௌந்தர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். பள்ளி, கல்லூரியில் படிக்கும் போதெல்லாம் காதல் வரவில்லை என்றும் ஆனால் கல்லூரி முடிந்த பின்னர் ரீயூனியன் மீட் செய்யும்போது சௌந்தர்யாவை சந்தித்தபோது காதல் வந்ததாகவும், இருந்தாலும் அந்த காதலை தான் வெளிப்படுத்தவில்லை என்றும் யோகி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்
இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் தன்னுடைய காதலை சௌந்தர்யாவிடம் வெளிப்படுத்தி அவரிடமும் அவருடைய பெற்றோரிடம் சம்மதம் பெற்று தற்போது திருமணம் செய்து கொண்டதாக யோகி தெரிவித்துள்ளார். ஊரடங்கு நேரம் என்பதால் நண்பர்களை திருமணத்திற்கு அழைக்க முடியவில்லை என்றும் இருப்பினும் ஊரடங்கு முடிந்த பின்னர் அனைவரையும் அழைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்தும் எண்ணம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
நடிகர் யோகி திருமணம் நடந்த செய்தி அறிந்து அவருடைய நண்பர்கள் மற்றும் விஜய் டிவி குழுவினர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்