நிர்வாண கோலத்தில் மாணவிகளை சோதனை செய்த காப்பாளர்… முகம்சுழிக்க வைக்கும் காரணம்!!

680

மத்தியபிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் அமைந்துள்ள டாக்டர்ஹரி சிங் கொயர் பல்கலைக்கழத்தில், ராணி லக்‌ஷிமிமாய் என்ற பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியின் மாணவிகளில் யாரோ ஒருவர் தான் மாதவிடாயின் போது பயன்படுத்திய நாப்கினை தரையில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதனால் கோபமடைந்த விடுதி காப்பாளர், எல்லா மாணவிகளையும் அழைத்து வரச்செய்து, அவர்களை நிர்வாணக் கோலத்தில் சோதனை செய்துள்ளார். சுமார் 40 மாணவிகளிடம் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் இதுகுறித்து கல்லூரி துணைவேந்தரிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக துணைவேந்தர் ஆர். பி டைவரி வெளியிட்ட ட்விட்டில் அவர் கூறியிருப்பதாவது ‘’ எல்லா மாணவிகளையும் என் மகளைப்போலவே நான் பார்க்கிறேன் .

இந்த சம்பவத்திற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பாக விடுதி காப்பாளரிடம் விசாரணை நடத்தப்படும். அவர் மீது ஏதேனும் தவறு கண்டுபிடிக்கப்பட்டால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.