நீங்கள் அடுத்த ஜென்மத்தில் எந்த உயிரினமாக பிறப்பீர்கள் தெரியுமா? ஆச்சர்யமான தகவல் இதோ!!

1635

ஆச்சர்யமான தகவல் இதோ

இந்த பூவுலக வாழ்க்கை என்பது நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களின் அடிப்படையில்தான் கிடைத்தது என்பது பெரும்பாலான மக்களின் நம்பிக்கை. இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்கும் நல்லது, கெட்டது அனைத்தும் நாம் செய்த பாவ, புண்ணியங்களை பொறுத்ததுதான். அதுமட்டுமின்றி இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் பாவங்களை பொறுத்துதான் நமது அடுத்த பிறவியும் இருக்கும். இப்போது நாம் வாழும் வாழ்க்கை நமது முதல் ஜென்மமும் அல்ல, இறுதி ஜென்மமும் அல்ல.

மறுபிறவி என்பது இருப்பது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாவிட்டாலும் மறுஜென்மம் பற்றிய பல குறிப்புகள் நமது வேதங்களிலும், புராணங்களிலும் உள்ளது. அதன்படி இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் பாவங்கள் இந்த ஜென்மத்தில் மட்டுமின்றி நமது அடுத்த ஜென்மத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மகாபாரதத்தை எழுதிய மாமுனிவர் வேதவியாசர் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளபடி நீங்கள் செய்யும் பாவங்களால் நீங்கள் அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பீர்கள் என்று கணக்கிடலாம். இந்த பதிவில் உங்கள் பாவங்களின் படி உங்களின் அடுத்த ஜென்மம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்.

மறுபிறப்பு : மறுபிறப்பு என்பது நமது ஆன்மாவின் மறுபிறப்பு என்பதாகும். ஏனெனில் அழிவு என்பது நமது உடலுக்குத்தானே தவிர நமது ஆன்மாவிற்கு அல்ல. ஆனால் நம் ஆன்மா எந்த உயிரினமாகவும் மறுபிறப்பெடுக்கலாம். வேதங்களின் படி நம் ஆன்மா மீண்டும் மனித பிறவி எடுக்கவேண்டுமென்றால் கிட்டத்தட்ட 84000 மறுபிறப்பை கடந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது.

கருட புராணம் : கருட புராணத்தில் கூறியுள்ளபடி நமது ஆன்மாவானது மனிதனாக பிறக்க அனுமத்திக்கப்பட்டபின் கருவில் இருக்கும் காலம் முழுவதும் கடவுளுக்கு அதற்காக நன்றி கூறிக்கொண்டிருக்கும். ஆனால் பூமியில் மனிதனாக பிறந்த பின்னர் அனைத்தையும் மறந்துவிட்டு பாவங்களை செய்ய தொடங்கிவிடுகிறார்கள். அந்த பாவங்கள் நீங்கள் அடுத்த பிறவியில் என்னவாக பிறப்பீர்கள் என்பதை தீர்மானிக்கும்.

பாவம் 1 : ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவளை கட்டாயப்படுத்தி பாலியல் உறவிற்கு உட்படுத்துவதோ, உடல்ரீதியாக துன்புறுத்துவதோ அவர்களுக்கு நரகத்தில் பல கொடிய தண்டனைகள் காத்திருக்கிறது. அப்படிப்பட்ட கொடியவர்கள் அடுத்த பிறவியில் ஓநாயாக பிறப்பார்கள், அதற்கு அடுத்த பிறவியில் குள்ளநரியாகவும், அதன்பின் கழுகாகவும் பிறப்பார்கள்.

பாவம் 2 : குடும்பத்தில் மற்றும் வெளியில் உள்ள வயதில் மூத்தவர்களை மதிக்காமல் நடப்பதோ, அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவதோ, சமுதாயத்தின் முன் அவர்களை அவமானப்படுத்துவதோ உங்களை அடுத்த பிறவியில் காகமாக பிறக்க வைக்கும். அந்த பிறவியில் நீங்கள் குறைந்தது 10 ஆண்டாவது வாழ்ந்து கஷ்டப்படவேண்டியிருக்கும்.

பாவம் 3 : தங்கத்தை திருடுவது என்பது புராணங்களின் படி மன்னிக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது. இந்த குற்றத்தை செய்தவர்கள் தங்களின் அடுத்த பிறவியில் பல துயரங்களை சந்திக்க தயாராக இருக்கவேண்டும். வியாசரின் கூற்றுப்படி இந்த தவறை செய்தவர்கள் அடுத்த பிறவியில் பூச்சியாக பிறப்பார்கள். அதேபோல வெள்ளியை திருடுபவர்கள் புறவாக பிறப்பார்கள்.

பாவம் 4 : திருடுதல், மற்றவர்களின் உடைமைகளை தனதாக்குதல், உடைகளை திருடுதல் போன்றவை கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த தவறுகளை செய்பவர்கள் தன்னுடைய அடுத்த ஜென்மத்தில் கிளியாக பிறப்பார்கள். வாழ்க்கை முழுவதையும் அவர்கள் கூண்டுக்குள்ளேயே கழிக்க நேரிடும்.

பாவம் 5 : பிற உயிர்களை பறிப்பது, கொலை செய்வது போன்றவை மிகப்பெரிய பாவங்களாகும். இந்த பாவத்தை செய்பவர்கள் தன்னுடைய அடுத்த ஜென்மத்தில் கழுதையாக பிறப்பார்கள். கழுதைதான் தன் வாழ்நாள் முழுவதும் தன் எஜமானர் செய்யும் கொடுமைகள் அனைத்தையும் தாங்கிக்கொண்டாலும் வாழ்க்கை முழுவதும் சுமக்கமுடியாத அளவிற்கு சுமைகளை சுமக்கக்கூடிய மோசமான தண்டனையை அனுபவிக்கும்.