விசாகபட்டினம்….
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். சிறுமியின் தாய்க்கு 5 மாதங்கள் முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாய் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், 42 வயதான தந்தையின் பாதுகாப்பில் சிறுமி வசித்து வந்துள்ளார். இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக சிறுமி மன உளைச்சலில் பள்ளியில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். அதை கவனித்த வகுப்பு ஆசிரியர் சிறுமியிடம் கேட்டபோது, எனது தந்தை அடிக்கடி என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவிக்க, ஆசிரியருக்கு அது பேரதிர்ச்சியை தந்தது.
இதனையடுத்து, சிறுமியின் தந்தையை ஆசிரியர் பள்ளிக்கு அழைத்து விசாரித்தபோது, செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சிறுமியின் தந்தை மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதன் பின்னர், பள்ளி ஆசிரியர் சிறுமியுடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். அதன் பேரில், சிறுமியின் தந்தையிடம் மேற்கொண்ட விசாரணையில், மகள் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தி வந்ததால் ஆத்திரத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.
ஆனால், போலீஸ் தரப்பில் சிறுமி தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேற்படி நடந்த விசாரணையில், சிறுமியின் தந்தைக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், சிறுமியின் தாய் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்திருப்பதும் தெரிய வந்தது.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிறுமியின் தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்படவே தற்போது அவர் தனது தாய் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில்தான் சிறுமிக்கு இப்படியான சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக கைதான சிறுமியின் தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.