நேரலையில் செய்தி வாசிப்பின் போது க ழன்று வி ழுந்த பல்! நெகிழ வைத்த பெண் வா சிப்பாளரின் செ யல்…. தீ யாய் ப ரவும் காட்சி!!
484
செ ய்தி வாசிப்பின்போது பல் கழன்ற நிலையில் எந்தவொரு சலனமும் இல்லாமல் செயல்பட்ட செய்தி வாசிப்பாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உக்ரைனில் உள்ள தொலைக்காட்சியில் 20 ஆண்டுகளாக செய்தி வாசித்து வருபவர் மரிச்கா பதல்கோ.
அண்மையில் செய்தி வாசித்தபோது, வாயின் முன்பகுதியிலிருந்த ஒட்டுப்பல் கழன்றுள்ளது.
அப்போது எந்தவொரு சலனும் இல்லாமல், கழன்ற பல்லை கையில் பிடித்து நகர்த்திவிட்டு, தொடர்ந்து செய்தி வாசித்தார். இது இணையதளத்தில் ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு மகளுடன் விளையாடியபோது, பல் உடைந்ததாகவும், தனது 20 ஆண்டுகால செய்தி வாசிப்பில் தற்போது சிறந்த அனுபவம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேரலையின் போது பல் கழன்ற போதும் சற்றும் பதற்றப்படமால் தொடர்ந்து செய்தி வாசித்து மிரிச்காவிற்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.