மதுரை….
மதுரையைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி லாவண்யா. நிதி ஆலோசகரான நாகராஜன் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார்.
முதலில் இவருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. இதையடுத்து பல லட்சங்களை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். பின்னர் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.
இருப்பினும் பங்குச் சந்தையில் இவருக்கு லாபம் கிடைக்கவில்லை. மேலும் மேலும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது. அதேபோல் அவரது தொழிலிலும் நஷ்டம் அடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த தம்பதியர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்த் தம்பதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.