பச்சை நிறத்தில் வாந்தி… காதலனை கொன்ற காதலியின் வாட்ஸ்அப் உரையாடல் அம்பலம்!!

1160

கேரளா….

தமிழ்நாடு- கேரளா எல்லையில் அமைந்துள்ள பகுதி பாறசாலை, இதனை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை மோசமாகி ஷாரோன் ராஜ் உயிரிழந்துவிட்டார்.

இதற்கு தன் மகன் காதலித்த பெண் தான் காரணம் என ஷாரோன் ராஜின் பெற்றோர் புகார் அளிக்க போலிசார் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் கிரீஷ்மா. அதாவது, தன்னுடைய காதலனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஷாரோன் ராஜை ஏமாற்றி கொலை செய்தது தெரியவந்தது.

கிரீஷ்மாவின் ஜாதகத்தில், ”பெண்ணின் முதல் கணவர் உயிரிழந்துவிடுவார், இரண்டாவது கணவருடன் தான் வாழ்வார்” என கணித்துள்ளார் ஜோதிடர் ஒருவர். இதை நம்பிய கிரீஷ்மா, தன்னுடைய காதலனை காப்பாற்றுவதற்காக ஷாரோன் ராஜை காதலிப்பது போல் நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய ஷாரோன் ராஜ், கிரீஷ்மாவை திருமணம் செய்து கொண்டார். இவரை வீட்டுக்கு அழைத்து சென்ற கிரீஷ்மா, குடிப்பதற்கு கஷாயம் கொடுத்துள்ளார், அதன்பின்னர் விஷம் கலந்த ஜூஸ் குடிக்கக் கொடுத்துள்ளார்.

இதைச் சாப்பிட்டதும் ஷாரோன் வாந்தி எடுத்துள்ளார், தொடர்ந்து அவர் உடல்நிலை மோசமடைய பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அப்போது கூட கிரீஷ்மாவுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்துள்ளார், அதில் பச்சை கலரில் வாந்தி வருகிறது என கூறியுள்ளார்.

அதற்கு கிரீஷ்மா, கஷாயம் குடித்ததால் தான் அப்படி இருக்கும், சரியாகிவிடும், தூங்கி ஓய்வெடுங்கள் என பதில் அனுப்பியுள்ளார். ஷாரோன் ராஜீம், சரியாகிவிடும், நீ கவலைப்படாதே என ஆறுதல் கூறியுள்ளார், இந்த வாட்ஸ் அப் உரையாடல்கள் வெளியாகியுள்ளது.