படுக்கைக்கு அழைக்கிறார்களா? – Casting Couch பற்றி நிவேதா பெத்துராஜ் அதிரடி பதில்!!

688

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். அதன்பிறகு அவர் கவர்ச்சியான, போல்டான கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். தற்போது அவர் கைவசம் பல தமிழ் படங்கள் உள்ளன.

இந்நிலையில் தான் அடுத்து ஹாலிவுட் படங்களில் நடிக்க விரும்புவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் நிவேதா. அவெஞ்சர்ஸ் படத்திற்காக ஆடிஷன் தற்போது நடந்துவருகிறது, அதில் கலந்துகொள்வதற்காக தயாராகி வருகிறாராம் அவர்.

மேலும் நடிகைகளை படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி பேசிய அவர், “இதுவரை எனக்கு அப்படி நடந்ததில்லை. மற்றவர்கள் அப்படி தனக்கு நடந்ததாக கூறியும் கேட்டதில்லை. அப்படி படுக்கைக்கு சென்று தான் படவாய்ப்பு வாங்கவேண்டும் என்கிற அவசியம் எனக்கில்லை. ஒரு குறிப்பிட்ட ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கில்லை. படத்தின் கதை திருப்தியாக இருந்தால் ஒப்புக்கொள்கிறேன். இப்போது என்னை தேடி வரும் படவாய்ப்புகளே போதும்” என நிவேதா பேட்டியளித்துள்ளார்.