சந்தேகம்… ஒரு உறவை கொள்ளும் முதல் கருவி. சந்தேகம் என்பது இந்த உலகிலேயே பெரிய கொடுமையான, விஷத்தன்மை வாய்ந்தது என்று கூறலாம். குறிப்பாக உறவில். அது கணவன், மனைவி; நட்பு; காதல்; பெற்றோர் – பிள்ளைகள்; ஆசிரியர் – மாணவர்கள் என்று எந்த உறவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் சந்தேகம் என்பது வரவே கூடாது.
ஒருவேளை சந்தேகம் மனதில் எழுந்தாலுமே கூட, அதை ஆரம்பத்திலேயே உரிய நபரிடம் மனம்விட்டு வெளிப்படையாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லையேல், அதனால் தேவையில்லாத பிரச்சனைகள், தாக்கங்கள் வாழ்வில் ஏற்படும். ஏன், இது உறவை, நற்பெயரை கூட பெரிதாக பாதிக்கலாம். இதோ! சந்தேகத்தின் பெயரில் தனது மனைவியை வேவு பார்த்த சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த ஐரோப்பிய நபருக்கு நடந்த கதி…
பால் லீவிஸ் வயது 46. இவர் தனது மனைவி அன் தனக்கு துரோகம் செய்கிறாரோ என்ற சந்தேகப்பட்டு, படுக்கை அறையில் மூன்று வருடமாக மனைவிக்கு தெரியாமல் இரகசிய கேமரா மூலம் வேவு பார்த்து வந்திருக்கிறார். மூன்று வருடம் கழித்து தான் ஒருமுறை எதிர்பாராத விதமாக லீவிஸ் பதிவு செய்திருந்த 29 வீடியோ பதிவுகளை கண்டுபிடித்துள்ளார் அன்.
மூன்று வருடமாக படுக்கை அறையில் வைத்திருந்த இரகசிய கேமாரக்களை, தான் எதிர்பார்த்த மாதிரி எந்த தடயமும் கிடைக்கவில்லை என்பதால், சமையலறைக்கு மாற்றியுள்ளார் லீவிஸ். இந்த மாற்றத்தின் போதுதான் அன் தனது கணவர் இரகசிய கேமரா மூலம் தன்னை படம் பிடித்து வருவதை அறிந்துள்ளார்.
ஒரு நாள் கையும் களவுமாக அன் கணவரை பிடித்துவிட்டார். இந்தாண்டு ஜனவரி மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிடிப்பட்ட பிறகு, அன் தனது கணவர் லீவிஸ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
காவலர்கள் விசாரித்த போது, 45 வயதிலான தன் மனைவி அன் தனக்கு துரோகம் செய்து வேறு நபருடன் உறவில் இருக்கிறாரோ என்ற சந்தேகம் இருந்தது. அவரை கையும் களவுமாக பிடிக்கவே இப்படி இரகசிய கேமரா வைத்தேன் என்று லீவிஸ் கூறியுள்ளார்.
லீவிஸ் இரகசிய கேமரா வைத்திருப்பதை அன் அறிந்த பிறகும் கூட, லீவிஸ் தொடர்ந்து இரகசியமாக படம் பிடித்து வந்து அன்னை வெறுப்பேற்றி இருக்கிறார். இதை பொறுத்தக்கொள்ள முடியாத போது, காவலர்கள் மற்றும் நீதிமன்ற உதவியை நாடி இருக்கிறார் அன்.
இந்த வழக்கை விசாரித்த ச்வான்சீ கிரவுன் நீதிமன்றம் கிட்டத்தட்ட இவர்களது உறவு முடிந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். இதில் செக்ஸுவல் காரணம் இல்லை என்றாலும். இவர் மனைவியின் நடத்தை பற்றி அறியவே கேமரா வைத்திருக்கிறார், என்றும் கூறியது.
அன்னுக்காக வாதாடிய வழக்கறிஞர் லீவிஸ் தனது மோசமான, அவமானத்திற்கு உரிய நடவடிக்கை மற்றும் செயல்களால் நற்பெயரை இழந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார். மேலும், லீவிஸ் காக வாதாடிய வழக்கறிஞர் லீவிஸ் ஒரு நல்லவர் என்பதை எடுத்துரைக்க அவரது கடின உழைப்பை பற்றியும், நல்ல செயல்கள் குறித்தும் கூறினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, என்ன கூறினாலும், லீவிஸ் செய்தது ஒரு வெறுக்கத்தக்க காரியம். லீவிஸ் செய்த குற்றத்திற்காக 14 வாரம் சிறை தண்டனையும், 12 மாத பணியிடை நீக்கமும் தண்டனையாக அளித்தார் நீதிபதி. இதுமட்டுமின்றி லீவிஸ் 120 மணிநேரம் ஊதியம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இப்போது லீவிஸ் மற்றும் அன் பிரிந்துவிட்டனர். மேலும், லீவிஸ் தனது அம்மாவின் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். லீவிஸின் அம்மா, “தனது மகன் அத்தனை மோசமானவன் இல்லை. அவன் தன்னிலை அறியாமல் ஒரே ஒரு தவறு செய்துவிட்டான். அது முட்டாள் தனமானது தான். ஆனால், இதற்கு காவல் நிலையம் செல்லாமலேயே தீர்வு கண்டிருக்கலாம் என்று கூறினார்.
லீவிஸ் – அன் தம்பதி வீட்டின் அருகாமையில் குடியிருந்தவார்கள், இவர்கள் பார்க்க பொதுவான, இயல்பான தம்பதிகள் போல தான் இருந்தனர். வெளியுலகிற்கு இவர்களுக்குள் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே தெரியாது என்றும் லீவிஸ் – அன் தம்பதி குறித்த தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். லீவிஸ் ஒரு இசை கலைஞர் என்று அறியப்படுகிறது.