பணக் கஷ்டத்தால் சேல்ஸ் கேர்ளாக இருந்த கார்த்தி பட நடிகை :16 வயதில் இப்படி ஒரு நிலையா?

710

ஃபதேஹி…

குடும்ப வறுமை காரணமாக 16 வயதிலேயே வேலைக்கு சென்றுவிட்டதாக நடிகையும், டான்ஸருமான நோரா ஃபதேஹி தெரிவித்துள்ள விடயம் ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

கனடாவில் பிறந்து வளர்ந்த நோரா ஃபஹேதி தற்போது இந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

மும்பையில் செட்டிலாகியிருக்கும் நோரா பெரும்பாலும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அவரின் டான்ஸ் வீடியோக்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் டான்ஸிங் குயீனான மாதுரி தீக்ஷித்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார் நோரா.

பாகுபலி படத்தில் வந்த மனோகரி பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்த நோரா, கார்த்தியின் தோழா படத்திலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கலந்து கொண்டார். டான்ஸ் தீவானே நிகழ்ச்சியின் 3வது சீசனில் நடுவராக இருக்கிறார் நோரா ஃபதேஹி.

இந்நிலையில் தான் சிறு வயதில் பட்ட கஷ்டம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார் நோரா. அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, என் குடும்பத்தில் பண பிரச்சனையாக இருந்தது.

குடும்பத்தை காப்பாற்ற நான் சிறு வயதிலேயே வேலைக்கு சென்றுவிட்டேன். உணவகம், பார்கள், ஷவர்மா நிலையங்கள், ஆண்களின் உடை விற்பனை செய்யப்படும் கடை என்று பல இடங்களில் வேலை செய்திருக்கிறேன்.

டெலிமார்க்கெட்டிங் அலுவலகத்தில் வேலை செய்தேன். பலருக்கும் போன் செய்து லாட்டரி டிக்கெட் விற்பது தான் வேலை.

மேலும் ஷாப்பிங் மாலில் இருக்கும் கடை ஒன்றில் சேல்ஸ் கேர்ளாக இருந்திருக்கிறேன். அது தான் என் முதல் வேலை. 16 வயதில் வேலைக்கு சென்றேன் என்றார்.