பயணிகள் விமானம் வீழ்ந்து விபத்து : 100க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக பலி!!

813

 

கியூபாவில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு பயணித்த போயிங் 737 ரக பயணிகள் விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் பயணித்த சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த விமானத்தில் 105 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்கள் உள்ளிட்ட 114 பேர் வரையில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.