பயிற்சிக்கு சென்ற சிறுமிக்கு கராத்தே மாஸ்டரால் நேர்ந்த கொடூரம்!!

244

வேலூர்…

வேலூர் அருகே 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கராத்தே மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் ஏரிகுத்தி பகுதியைச் சேர்ந்தவர் ஹயாஸ் அகமது. இவர், அங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர் சிறுவன், சிறுமிகளுக்கு காரத்தே பயிற்சி கொடுத்து வருகிறார்.

அப்படி, பயிற்சிக்கு வரும் ஒரு சிறுமியை, ஆசை வார்த்தைகள் கூறி, கராத்தே மாஸ்டர் ஹயாஸ் அகமது பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்ததில், அவர் நடந்தவற்றை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கராத்தே மாஸ்டர் ஹயாஸ் அகமதுவை போக்சோ சட்டத்தின் கீது போலீசார் கைது செய்தனர்.