பர்னிச்சர் கடையில் நடந்த அட்டூழியங்கள்…. வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல் : செல்போனை பார்த்து மிரண்டு போன போலீசார்!!

1041

பள்ளிக்கரணை…..

பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த தேவி என்பவர், சேலையூர் மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அருண்குமார் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் நடந்த அட்டூழியங்களை தெரிவித்திருந்தார்.

கடந்த 2018ம் ஆண்டு முதல், அந்த பர்னிச்சர் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்ததாக அந்த பெண் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். கடையின் ஓனர் அருண்குமார், தன்னை பாலியல் ரீதியாக அணுகியதாகவும், அதற்கு உடன்படாததால், தன்னையும், தனது குடும்பத்தையும் அழித்து விடுவதாக மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, அருண்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்,

அருண்குமாரை கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர்… இந்நிலையில், அருண்குமார் எப்படி கைதானார், சம்பந்தப்பட்ட பெண் யார்? என்பது குறித்த விவரங்களும் வெளியாகி உள்ளது.

பள்ளிக்கரணையில், குமரன் பர்னிச்சர் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வருகிறார் அருண்.. தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்தவர்.. இந்த கடையை இவர் வைத்தபோதிருந்தே, பாலியல் லீலைகளிலும் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

தன்னுடைய பர்னிச்சர் கடைக்கு, சேல்ஸ் பெண்கள் தேவை என்று விளம்பரம் வெளியிடுவாராம்.. ஓரளவு வசதி படித்த பெண்கள் என்றால்வேலைக்கு எடுத்து கொள்ள மாட்டாராம்.. படித்த பெண்கள் என்றாலே அருணுக்கு அலர்ஜியாம்.. அதனால், ஏழை குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்களுக்கு மட்டுமே குறி வைத்துள்ளார்.. ஏழ்மை நிலைமைக்கு உதவுவதற்காகவே இந்த வேலையை தருகிறேன், என்று சொல்லி, அவர்களை வேலைக்கும் சேர்த்து கொள்வாராம்.

இதற்கு பிறகுதான் மெல்ல மெல்ல தன் சேட்டையை காட்ட துவங்கி உள்ளார்.. வேலைபார்க்கும் தவறாகவும் நடந்து வந்துள்ளார்… வேலையில்தான் இப்படி என்றால், அவர்கள் டியூட்டி முடிந்து வீட்டுக்கு போனாலும், பின்னாடியே வீடியோ கால் செய்வாராம்..

வீடியோகாலில் அந்த பெண்களை நிற்கவைத்து, வற்புறுத்தி பேச சொல்லுவதுடன், பாலியல் தொல்லையும் கொடுத்து வந்ததாக சொல்கிறார்கள்.. அவரிடம் பணிபுரியும் பெண்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லாததால், சம்பந்தப்பட்டவர் இந்த பாலியல் அக்கிரமத்தை வெளியே சொல்லாமல் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு பணிபுரிந்து வந்த ஒரு பெண், அருணின் செல்போனை ஒருநாள் பார்த்துவிட்டார்.. அதில், கடையில் பணியாற்றும் எல்லா பெண் ஊழியர்களின் ஆபாச படங்களும் அதில் இருப்பதைக் கண்டு அதிர்ந்தார்… அதனால், உடனடியாக சம்பந்தப்பட்ட பெண்களுக்கு, இதுகுறித்து பெண் தகவல் தெரிவித்து அலர்ட் செய்துள்ளார்..

ஆனால், அதற்குள் இந்த விஷயம் அருணுக்கு தெரிந்துவிட்டது.. அதனால், ஆபாச வீடியோவில் உள்ள பெண்களை அழைத்து, அவர்களிடம் பணம் தந்து, இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று அருண் கேட்டுக் கொண்டுள்ளார்..

வீடியோவில் உள்ள பெண்களுக்கு பணத்தை தந்து, ஓரளவு நிலைமையை சமாளித்தார் என்றாலும், செல்போனை பார்த்துவிட்ட, அந்த பெண்ணை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழித்துள்ளார்.. அந்த பெண்ணை எதிர்த்தால் இன்னும் பிரச்சனையாகும் என்பதால்,

அந்த பெண்ணை காதலிக்க முயன்றுள்ளார்.. அந்த காதல் உண்மை என்று, சம்பந்தப்பட்ட பெண்ணும் நம்பி ஏமாந்தார்.. காலப்போக்கில் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியும் உள்ளார்… இதற்கு பிறகுதான், அருண்குமார் போன்றவர்களால், இன்னும் பல பெண்கள் சீரழிவார்கள் என்பதால், பள்ளிக்கரணை போலீசில் புகார் தந்தார்.

கடையில் பணியாற்றும் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்தும், தனக்கு நேர்ந்த பாலியல் சித்ரவதைகள் குறித்தும் புகாரில் எழுதி தந்துள்ளார்.. அதன்அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அருண்குமார் செல்போனில் இருந்த வீடியோக்களை பார்த்து அதிர்ந்து விட்டார்களாம்..

வீடியோவில் இருக்கும் பெண்களை தனக்கு சாதகமாக பேச வைப்பதற்காக அந்தப் பெண்களை அழைத்து வந்த நிலையில், விசாரணையில் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை அந்த பெண்கள் புட்டுபுட்டு விவரித்துள்ளனர்… இதனையடுத்து காமக்கொடூரன் அருண்குமாரை கைது செய்தனர் போலீசார்.. இவரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யார்யார் உள்ளனர் என்று தெரியவில்லை.. விசாரித்து கொண்டிருக்கிறார்கள்…!!