பல அதிசயங்களை கொண்ட நீல நிற வாழைப்பழம்.. இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? வைரல் புகைப்படம்!

485

வாழைப்பழம்………..

பொதுவாக வாழைப்பழத்தில் கற்பூரவள்ளி, மோரிஸ், பச்சை வாழை, பூம்பழம், ரஸ்தாளி, செவ்வாழை என்று பல வகைகள் உள்ளன. இதில், ஒவ்வொன்று தனித்தன்மையான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.

மேலும், பச்சை வாழை மற்றும் செவ்வாழை தவிர்த்து மற்ற அனைத்து வகைகளும் மஞ்சள் நிற தோலை கொண்டிருக்கும் என்பது தெரியும். ஆனால், ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் என்று அழைக்கப்படும் நீலநிற நிறம் கொண்ட வாழைப்பழம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இதன், தோல் மட்டுமல்ல பழம் முழுவதுமே நீல நிறத்தில் இருப்பது தான் ஆச்சரியம். மேலும், இந்த பழமானது ஐஸ் கிரீம் போன்ற சுவையுடன் மிருதுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிலும், வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்ற சுவையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவை தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் வளர்க்கப்படுகின்றன. அதேபோல அவை ஹவாயிலும் நன்கு வளரக்கூடியவை ஆகும். இந்த வாழைப்பழங்கள் அதிக குளிர்ச்சியைத் தங்குவதால் உறைபனிக்குக் கீழே உள்ள வெப்பநிலையில் கூட வளரக்கூடியவை. ஆனால் அவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ற வெப்பநிலை 40F ஆகும்.

மேலும்m, நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின்கள் சி மற்றும் பி6 ஆகியவை நிறைந்துள்ளன. இதனுடன் சேர்த்து, அவற்றில் சில அளவு இரும்பு, பாஸ்பரஸ், தியாமின் மற்றும் செலினியம் ஆகியவையும் அடங்கியுள்ளன.