பல கோடிகள் பணத்தை துச்சமாக எண்ணி துறந்து யாசகம் பெற்று வாழும் கோடீஸ்வர குடும்பம் : வெளியான அதிர்ச்சி காரணம்!!

305

இந்தியா…

இந்தியாவில் பல கோடிகளுக்கு அதிபதியான குடும்பம் அனைத்து சொத்துக்களையும் துறந்துவிட்டு சமண துறவிகளாக மாறியுள்ளனர்.

சத்திஷ்கரை சேர்ந்த புபேந்திரா டக்லியா என்பவர் மருந்து வணிகத்தில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு சப்னா என்ற மனைவி 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இந்த குடும்பத்துக்கு ரூ 81 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் அனைத்து சொத்துக்களையும் துறந்து சமண துறவிகளாக மாறியுள்ளனர் புபேந்திரா மற்றும் குடும்பத்தார்.

அதன்படி ஐந்து நாட்கள் சடங்கு விழாவிற்குப் பிறகு ஜெயின் துறவிகளாகத் மாறியுள்ளனர்.

சமண துறவிகளாக, அவர்கள் உலக ஆதாயங்களையும் இன்பங்களையும் துறந்து, யாசகம் மற்றும் மத நன்கொடைகளில் உயிர்வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புபேந்திரா மற்றும் குடும்பத்தாரின் இந்த முடிவு பலரையும் நெகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.