பல பெண்களை காதல் வலையில் ஏமாற்றிய இளைஞருக்கு ஒரு பெண் எடுத்த முடிவால் நேர்ந்த பரிதாபம்!!

410

கும்பகோணம்….

பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றி வந்த இளைஞரை சமயோசிதமாக செயல்பட்டு பா.திக்கப்பட்ட பெண் ஒருவர் அவரை திருமணம் செ.ய்து கொண்டு பின்னர் மாலையும் கழுத்துமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று ஒப்படைத்த ச.ம்.பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கும்பகோணத்தில் நாகேஸ்வரம் வடக்கு வீதியை சேர்ந்த அந்தப் பெண் பெற்றோரை இ.ழ.ந்து உறவினர் வீட்டில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வருகிறார். அப்போது தியாகராஜன் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டிருக்கிறது.

ஒருநாள் தியாகராஜனின் செல்போனை யதார்த்தமாக வாங்கி பார்த்தபோது அந்த பெண் அதிர்ந்து போயிருக்கிறார். அதில் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள், வீடியோக்களை பார்த்து அவர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்.

அது குறித்து கேட்டபோது, அவரிடம் உண்மையைச் சொல்லாமல் மழுப்பி இருக்கிறார் தியாகராஜன். அந்த சம்பவத்திற்குப் பின்னர் அப்பெண்ணிடம் இருந்து தியாகராஜன் விலகியே இருந்திருக்கிறார்.

இந்த விவரம் பெண்ணின் உறவினர்களுக்கு தெரிய வர, தியாகராஜனை மடக்கிப்பிடித்து நாகேஸ்வரன் கோயிலில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்த கையோடு மாலையும் கழுத்துமாக தியாகராஜனை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்துள்ளனர்.

தியாகராஜனிடம் ஆய்வாளர் மகாலட்சுமி, பெண் வீட்டாரின் புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.