பொந்தேரிப்பாளை….
பொந்தேரிப்பாளையம் கங்காநகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். 36 வயதான இவரது அண்ணன் விஜய் என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலை தொடர்பாக முத்துக்குமார், செபஸ்டின், பங்கஜ்குமார் உள்பட ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அண்ணன் விஜய்யை வெட்டிக் கொன்ற கும்பலை எப்படியாவது பழி தீர்த்தே ஆக வேண்டும் என பல மாதங்களாக திட்டம் போட்டு வந்தார் தம்பி சுவாமிநாதன். இதற்காக தனது நண்பர்களுடன் சேர்ந்து சில ஆலோசனைகளையும் கேட்டிருக்கிறார்.
இந்த நிலையில் அண்ணன் கொலைக்கு தம்பி பழிவாங்க இருக்கும் தகவல் எதிர்தரப்புக்கு தெரியவந்திருக்கிறது. அண்ணனைப் போலவே தம்பியையும் கொன்றாக வேண்டும் என முடிவு எடுத்துள்ளனது அந்த கும்பல்.
இதற்காக சுவாமிநாதனின் நண்பர்களை ரகசியமாய் அழைத்துப் பேசிய அந்த கும்பல், உங்கள் நண்பன் சுவாமிநாதனை காட்டிக் கொடுத்தால் 20 லட்சம் ரூபாய் தருவதாக ஆசை காட்டியுள்ளனர். லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பதற்காக தங்கள் உயிர் நண்பனைக் காட்டிக் கொடுப்பதற்கு அவர்கள் சம்மதித்தும் உள்ளனர்.
இந்த நிலையில் 26-ம் தேதியன்று இரவு வீட்டில் இருந்த சுவாமிநாதனை, அவரது நெருங்கிய நண்பர்கள் நான்கு பேர் வெளியே அழைத்துள்ளனர். நண்பர்களின் பேச்சைக் கேட்டு வெளியே வந்த சுவாமிநாதனை, முத்துக்குமாரின் கும்பல் சுற்றி வளைத்தது. தனியே சிக்கிய சுவாமிநாதனின் முகத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்ததையடுத்து அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
அண்ணனைக் கொன்ற கும்பலை பழிவாங்க வேண்டும் என காத்திருந்த நிலையில், அதே கும்பலால் தம்பியும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நெருங்கிய நண்பர்களின் சூழ்ச்சியால் நடந்த இந்த செயல் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.