இந்தியாவில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளியில் சரமாரிய குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் வடோதராவில் பார்த்தி என்ற பள்ளி உள்ளது. இங்கு 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு தான் இந்த பள்ளியில் சேர்ந்துள்ளான்.
இந்நிலையில் நேற்று பள்ளியின் முதல் மாடியில் உள்ள தன்னுடைய வகுப்பறைக்கு மாணவன் சென்று கொண்டிருந்த போது, அவனை வழிமறித்து மர்ம நபர்கள் சிலர் சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்ச் சென்றுள்ளனர்.
இதில் சிறுவன் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளான். சிறுவனின் உடலில் 10-க்கும் மேற்பட்ட கத்தி குத்து காயங்கள் இருந்ததாகவும், கத்தியால் குத்திவிட்டு சிறுவனின் உடலை கழிவறையில் வீசிவிட்டு, அவனுடைய பையை பள்ளியின் மற்றொரு இடத்திலும் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார், அங்கிருக்கும் சிசிடிவி கமெராக்களை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிக்கு சேர்ந்து ஒருவாரத்திலே சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பதால், பல்வேறு சந்தேகங்கள் எழும்புவதாகவும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.