பாதிரியார்களால் சீரழிக்கப்பட்டது இந்த பெண்ணா? வெளியான உண்மை தகவல்!!

985

கேரளாவில் 5 பாதிரியார்களால் மிரட்டி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் ஒரு மருத்துவரது என தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் பத்தனம்திட்டா பகுதியில் குடியிருக்கும் மருத்துவர் அஞ்சு ராமச்சந்திரன் என்பவருக்கு கேரள பாதிரியார்களின் லீலைகள் மிகவும் தாமதமாகவே தெரியவந்துள்ளது.

அதுவும் பாதிரியார்களால் சீரழிக்கப்பட்ட பெண் என இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்த பின்னரே.ஜூன் 25 ஆம் திகதி இவரது முன்னாள் சக மருத்துவர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து குறித்த புகைப்பட விவகாரத்தை தெரிவித்தபோது, உண்மையில் மருத்துவர் அஞ்சு ராமச்சந்திரன் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார்.

இவர் மட்டுமல்ல, இவரது கணவருக்கும் குறித்த பாதிரியார்களின் புகைப்படங்களுடன் அஞ்சு ராமச்சந்திரன் புகைப்படமும் இணைக்கப்பட்டு ஒரு வாட்ஸ் ஆப் தகவலும் கிடைத்துள்ளது.மருத்துவர் அஞ்சு ராமச்சந்திரனுக்கு இவ்வாறு புகைப்பட சிக்கல் ஏற்படுவது இது முதன் முறையல்ல.

கடந்த 2017 ஆம் ஆண்டு இவரது பேஸ்புக் பக்கத்தில் இருந்த புகைப்படத்தை எடுத்து அதன் தலைப்பகுதியை பயன்படுத்தி ஒரு ஆபாச புகைப்படத்துடன் இணைத்து சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

பின்னர் அதே புகைப்படம் கேரளாவுக்கு கிடைத்த புது ஆபாச நடிகை என்ற பெயரில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.சில மாதங்களுக்கு முன்னர் பொலிசில் சிக்கிய ஆபாச நடிகையின் உரையாடல் என்ற பெயரில் இவரது புகைப்படத்தை இணைத்து வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான மருத்துவர் அஞ்சு ராமச்சந்திரன் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதுடன் சைபர் பிரிவினருக்கும் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ள மருத்துவர் அஞ்சு, இதுபோன்ற விவகாரங்களால் பேஸ்புக்கில் உள்ள அனைத்து தனியான புகைப்படங்களையும் தாம் அகற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.