பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு : போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

292

வேலூர்….

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பாதி எரிந்த நிலையில் இருந்த ஆண் சடலத்தை கண்டெடுத்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சித்தூர்- வேலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தாடூர் பகுதியில் விவசாய நிலத்தில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் இருப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அந்த ஆணின் பெயர் சங்கர் என்பதும், கேஜி கண்டிகை பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த தும் தெரிய வந்துள்ளது.

அவர் அருகில் பெட்ரோல் கேன்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டாரா, அல்லது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.