அசாம்….
கவுகாத்தியில் சிறுநீரகத்தை பிடித்து பானிபூரியில் கலக்கும் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
பெரும்பாலான மக்களுக்கு துரித உணவுகளில் பிடித்தவை பானிபூரிதான். அதுவும் வடமாநிலக்காரர்கள் தயாரிக்கும் பானிபூரிக்கு தனி சுவைதான்.
அதிலும் பானிபூரியை சாப்பிட்டுவிட்டு பானியை மட்டும் ஒரு டம்ளர் கூடுதலாக கேட்டு குடிப்போம். ஆனால் இந்த வீடியோவை பார்த்தால் பானி பூரிகடைக்கே இனி போகமாட்டீர்கள்.
ஆத்கோன் பகுதியல் சாலையோரத்தில் பானிபூரி கடை நடத்தி வரும் கடைக்காரன், தனது சிறுநீரை ஒரு கப்பில் பிடித்து அதை பானிபூரியில் கலக்கும் வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது.
நேற்று இந்த வீடியோ வைரலான நிலையில் கடைக்காரனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.