பாரிய நிலநடுக்கம்… பேரழிவு! மஞ்சள் கல் எரிமலை வெடித்தால் என்னாகும்?

846

அமெரிக்காவில் அமைந்துள்ள மஞ்சள் கல் என்று அழைக்கப்படும் எரிமலை உருவான விதம் குறித்து இதுவரை அறிவியலாளர்கள் கூறிவந்த விளக்கத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்து ஒன்றை சமீபத்தில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதுவரை பூமியின் பரப்பிலிருந்து மிக ஆழத்தில் உள்ள Mantle எனப்படும் பகுதியிலிருந்தே எரிமலைக்குழம்பு உருவாகுவதாக கருதப்பட்டு வந்தது.

இப்போது இல்லினாயிஸ் பல்கலைக்கழகத்தின் நிலவியல் வல்லுநரான Dr Lijun Lium கூறியுள்ள புதிய கோட்பாட்டின்படி, மஞ்சள் கல் எரிமலையிலிருந்து வெளிப்படும் எரிமலைக் குழம்பு Mantleஇலிருந்து உருவாகாமல் அமெரிக்காவின் மேற்குக் கரையிலிருந்தே உருவாகிறது என்று கூறியுள்ளார்.

நிலவியல் துறை இணை பேராசிரியரான Dr Lijun Lium டெக்டானிக் தட்டுகளின் நகர்வே மஞ்சள் கல் எரிமலை உருவாகுவதற்கு காரணமாக இருக்கும் என்பதை விளக்க முப்பரிணாம சூப்பர் கம்பியூட்டர் மாதிரிகளைப் பயன்படுத்தியுள்ளார்.

அதன்படி மஞ்சள் கல் எரிமலைக் குழம்பு Mantleஇலிருந்து உருவாகாமல் டெக்டானிக் தட்டுகளின் வலிமையான நகர்தல்களின் காரணமாகவே ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த கோட்பாடை ஆதரித்துள்ள Parkland Staerkel Planetariumஇல் புவி அறிவியல் பிரிவில் இணை பேராசிரியராக உள்ள ஜூலி ஏஞ்சல், வட அமெரிக்காவிற்கு கீழே உள்ள வட அமெரிக்கத் தட்டின் Nazca தட்டுதான் மஞ்சள் கல் எரிமலைக் குழம்பு வெளிப்படக்காரணம் என்று விளக்கமும் அளித்துள்ளார்.

இந்த மஞ்சள் கல் எரிமலை மேற்கு அமெரிக்காவிலுள்ள மஞ்சள் கல் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது.மஞ்சள் கல் தேசியப் பூங்கா அடிக்கடி நில நடுக்கங்களை சந்தித்துவரும் நிலையில், நில நடுக்கங்களின் காரணமாக அங்கு அமைந்துள்ள எரிமலை வெடித்தால் என்ன நிகழும் என்கிற அச்சம் எப்போதும் மக்களிடம் காணப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

அமெரிக்காவிலேயே பெரியதான எரிமலை அமைந்துள்ள மஞ்சள் கல் தேசியப் பூங்கா பகுதியில் சமீப நாட்களில் இதுவரை 200க்கும் அதிகமான முறை நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.சரி, ஒருவேளை மஞ்சள் கல் எரிமலை வெடித்தால் என்ன ஆகும்?இரண்டு வகையான விளைவுகள் ஏற்படும்.

ஒன்று உள்ளூர் மட்டத்தில் சாம்பல் கொட்டுவதால் ஏற்படும் விளைவுகள்.
இரண்டு உலக அளவில் ஏற்படும் வானிலை மாற்றங்கள்.அருகிலுள்ள மாகாணங்களான Montana, Idaho, மற்றும் Wyoming ஆகியவையும் அமெரிக்காவின் பிற பகுதிகளும் ஏன், உலகமே பாதிக்கப்படும்.

ஆனால் அதிருஷ்டவசமாக சில ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த எரிமலை வெடிக்கும் அபாயம் இல்லை என்று அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆனால் NASAவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் “விண்கல் ஒன்று பூமியின்மீது மோதுவதைவிட இந்த எரிமலை வெடிப்பதால் அதிக ஆபத்து ஏற்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அது மட்டுமின்றி மஞ்சள் கல் எரிமலை சுமார் 600,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கும், அது வெடித்து 600,000 ஆண்டுகள் ஆகிவிட்டதால் நாம் சற்று கவனமாகத்தான் இருக்க வேண்டும் என்று வேறு அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.