பாலியல் உறவுக்கு மறுத்ததால் பெண் படுகொலை : அதிர்ச்சி சம்பவம்!!

819

தமிழகத்தில் பாலியல் உறவுக்கு மறுத்ததால் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது மனைவி ஜெயந்தியை காணவில்லை என, கடந்த 18ஆம் திகதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், சிங்காநல்லூர் பகுதியில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, கால்வாயில் வீசப்பட்ட பெண் சடலத்தை பொலிசார் கைப்பற்றினர்.

பின்னர், பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு பொலிசார் அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்த புகார்களை ஆராய்ந்த பொலிசார், சிவகுமாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பின்னர் நடந்த விசாரணையில், அந்த சடலம் சிவக்குமாரின் மனைவி ஜெயந்தி என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், ஜெயந்தி அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் வீட்டில் வேலை செய்து வந்துள்ளதும், அங்கு ஓட்டுநராக வேலை பார்த்து வரும் மணிவேல் என்பவருடன் அவருக்கு பழக்கம் இருந்ததும் தெரிய வந்தது.

பின்னர், மணிவேல் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தான் ஜெயந்தியை உறவுகொள்ள முயன்றதாகவும், ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் நைலான் கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மேலும், அவர் அணிந்திருந்த 4 சவரன் நகையை திருடிவிட்டு, கொலை செய்த பின்னர் உடலை சாக்குப்பையில் கட்டி, குளத்தேரி சாக்கடை கால்வாயில் வீசியதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிவேல், மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இச்சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.