செகோர்..
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தன்னை காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக கிணற்றில் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் செகோர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல்வெளி பக்கம் சென்றபோது அந்தச் சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து சிறுமி தன்னை காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக சிறுமியை அருகில் இருந்த கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். சிறுமி கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து அந்த நபர் தப்பியுள்ளார்.
கிணற்றில் விழுந்த சிறுமி கிணற்றிலிருந்த கம்பியைப் பிடித்து உயிர் தப்பியுள்ளார். அந்த கம்பியைப் பிடித்து கிணற்றின் மேலேறி வந்த சிறுமி வீட்டிற்குச் சென்று நடந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலிஸில் புகாரளித்தனர். சிறுமியின் பெற்றோரின் புகாரின் பேரில் போலிஸார் அந்த குற்றவாளியை நேற்று கைது செய்தனர்.
அந்த நபர் மீது மேல் கற்பழிப்பு மற்றும் குழந்தை வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.