பிச்சைகாரர்கள் என்று சர்வ சாதரணமாக நினைக்கிறோம். ஆனால் அவர்களும் தாங்கள் பிச்சையெடுப்பதில் கிடைக்கும் பணத்தை சிறுக சிறுக சேமித்து வைத்து அதன் மூலம் வீடு கட்டி வசதியான வாழ்க்கை வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.
பரத் ஜெயின் : பரத் ஜெயின் இந்தியாவை சேர்ந்த பிச்சைகாரர். இவர் படேல் நகரில் 80 இலட்ச ரூபாய் மதிப்பிலான சொந்த வீடு வைத்துள்ளார். மும்பையில் பிச்சை எடுத்து வரும் இவர் மாதம் 75 ஆயிரம் சம்பாதிக்கிறார். இவருக்கு சொந்தமான கடைகளில் இருந்து மட்டும் மாதம் பத்தாயிரம் ரூபாய் வாடகை வருகிறதாம்.
கிருஷ்ண குமார் : இந்தியாவை சேர்ந்த மற்றுமொரு பணக்கார பிச்சைக்காரர் கிருஷ்ணகுமார். இவருக்கு சொந்தமாக ஒரு பிளாட் இருக்கிறது. ஒரு நாளுக்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.
சர்வதியா தேவி : பாட்னாவில் அசோக் சினிமாஸ் அருகே தனக்கென ஒரு சொந்த வீடு வைத்திருக்கிறார் சர்வதியா தேவி எனும் இந்த பாட்டி. பிச்சை எடுப்பது தான் இவரது தொழில் எனிலும், நல்ல அமோகமான வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறார். வருடத்திற்கு இன்சூரன்ஸ் ப்ரீமியம் மட்டுமே 36 ஆயிரம் ரூபாய் செலுத்துகிறார்.
ராங்ஃபெங் : மிகவும் ஏழ்மையில் வாடிக் கொண்டிருந்த ராங்ஃபெங் தெருக்களில் தான் படுத்து உறங்கி வந்தார். ஒரு நாள் நூடுல்ஸ் விற்கும் பெண்மணி ஒருவரை சந்தித்தார் ராங்ஃபெங். அந்த பெண்மணி ராங்ஃபெங்கிற்கு உணவு உண்ணவும், பயணிக்கவும் கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார்.
அதை கொண்டு சிறிதாக தொழில் துவங்கிய ராங்ஃபெங் இப்போது ஒரு பிஸ்னஸ் மேன். தனக்கு பணம் கொடுத்து உதவிய அந்த பெண்மணிக்கு 1,63,000 அமெரிக்க டாலர்களை நன்றிக்கடனாக அளித்துள்ளார் ராங்ஃபெங்.
சம்பாஜி : இவர் மும்பையில் ஒரு பிளாட்டும், சோலாப்பூரில் இரண்டு வீடுகளும் சொந்தமாக வைத்திருக்கிறார். இவர் ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கிறார் இது போக வாடகையாகவும் இவருக்கு சிலபல ஆயிரங்கள் மாத வருமானமாக வருகிறது