பிச்சை எடுப்பது அவமானமாக இருந்ததால் இதை செய்தேன் : இளம்பெண்ணின் தன்னம்பிக்கை கதை!!

766

மாற்றுத்திறனாளி

வங்கதேசத்தில் பிச்சை எடுத்து வந்த மாற்றுத்திறனாளி பெண் தனது தன்னம்பிக்கையால் தற்போது சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். டாக்காவை சேர்ந்தவர் ரோஜினா பேகம். கால்கள் சரியாக நடக்கமுடியாத மாற்றுத்திறனாளியான இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை பிச்சை எடுத்து தனது குழந்தைகளை காப்பாற்றி வந்தார்.

இது குறித்து என் குழந்தைகளின் நண்பர்கள் அவர்களை கிண்டல் செய்தார்கள். என்னால் என் குழந்தைகளுக்கு அவமானம் ஏற்படக்கூடாது என முடிவெடுத்தேன்.

இதையடுத்து சகோதரர் ஒருவர் மோட்டரில் இயங்கும் ரிக்‌ஷாவை கற்றுத்தர வேண்டினேன். அவரும் எனக்கு ஆறு மாதத்தில் கற்றுக்கொடுத்தார்.

தொடக்கத்தில் நான் பெண் என்பதால் என் ரிக்‌ஷாவில் ஏற மக்கள் தயங்கினார்கள். அவர்கள் மறுக்கும்போது நான் மாற்றுத்திறனாளி எனக்கு வாழ உதவுங்கள் என்பேன். இதன்பின்னர் மக்கள் என் ரிக்‌ஷாவில் ஏற தொடங்கினார்கள்.

தினமும் 200லிருந்து 250 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். இதன்மூலம் குழந்தைகளின் உணவு மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது.

எனக்கு பிச்சை போட்டவர்கள் தற்போது என்னை வேலைக்கு போகும் பெண்ணாக பார்க்கிறார்கள். என் ரிக்‌ஷாவிலும் அவர்கள் பயணிக்கிறார்கள் என கூறியுள்ளார்.