பிரபல இசையமைப்பாளர் மீது பிரபல நடிகை போலீஸில் புகார் : வலுக்கும் சர்ச்சை!!

1086

தேவி ஸ்ரீ பிரசாத்…..

தமிழ் திரையுலகில் தனக்கென தனி பாணியில் இசையமைத்து முத்திரை பதித்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு உட்பட மற்ற மொழிகளிலும் இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இந்தியாவின் முதல் பான்-இந்தியன் பாப் பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஐதராபாத் நகரில் உள்ள சைராபாத் போலீஸ் நிலையத்தில் பிரபல தெலுங்கு நடிகையான கராத்தே கல்யாணி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.அதில், ‘‘பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான் வெளியிட்ட பாடலில்,’ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்ற இந்து சுலோகங்களை பயன்படுத்தி இருக்கிறார்.

இதன் காரணமாக தானும், இந்து சமூகத்தினரும் புண்பட்டுள்ளோம். கடவுள் ராமரை துதிக்கும் போது இதுபோன்ற சுலோகங்களை பயன்படுத்தும் நிலையில் ஆபாசமான பாடலில் பயன்படுத்துள்ளார்.

எனவே தேவி ஸ்ரீ பிரசாத் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.இவர் வெளியிட்டுள்ள பாடலை இதுவரை 2 கோடி பார்வையாளர்களை கடந்த நிலையில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது திரையுலகத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நடிகையின் புகாரையடுத்து தேவிஸ்ரீ பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.