குஞ்சரம்மா..
தென்னிந்திய தமிழ் சினிமாவில் எராளமான கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் பல பேர்களின் உழைப்பு நமக்கு தெரியாமலே இருந்துவிடுகின்றன. இதற்கு காரணம் திரையில் தோன்றும் பிரபலங்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்கின்றன. சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதே கடினமான ஒன்றாக இருக்கிறது இதில் பல வருடம் சினிமா துறையில் பணியாற்றியும் திரையில் வந்த பிறகே அவர்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம் .
அந்த வகையில் வந்தவர்தான் கள்ளிப்பால் தேனி குஞ்சாரம்மா அவர்கள். இவர் முதன் முதலில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கருத்தம்மா என்ற படத்தில் நடிகையாகவும் பாடகியாகவும் அறிமுகமானார் .அதன் பின்னர் படிப்படியாக தனது நடிப்பு திறமையின் மூலம் பல படங்களில் நடித்தும் , வாய்ப்பு கிடைக்கும் படங்களில் பாடியும் இருக்கிறார். பின்னர் தமிழ் சினிமாவில் பின்னனி பாடகியாகவும் பணியாற்றி இருக்கிறார் .
மக்கள் மனதில் நீங்க இடம் பிடிக்க வேண்டுமானால் அவர்கள் நடிக்கும் கதாபாத்திரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டுவது அவசியம் . அப்படி ஒரு சீனில் காமெடி நடிகர் விவேக் உடன் சேர்ந்து நடித்த படத்தில் ஒரு பெண் குழந்தைக்கு க ள்ளிப்பால் கொ டுக்கும் ஒரு கதாபாத்திரமாக நடித்திருப்பார். அதன் பின்னர் தான் அந்த பேர் அடைமொழியாக வைத்து க ள்ளிப்பால் குஞ்சாரம்மா என அழைக்கப்பட்டார். அவர் இசைமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இசையில் பல படங்களில் பாடயுள்ளார். அதன் பின்னர் இசைநியாணி இளையராஜா மற்றும் ஹரிஷ் ஜெயராஜ் போன்றவர்களின் இசையில் பாடியுள்ளார்.
முக்கியமாக சொல்லவேண்டுமானால் விசில் என்ற திரைபடத்தில் நடிகர் விவேக் உடன் சேர்ந்து நடித்த காமெடி தான் இவனுக்கும் ஒரு பாயசத்த போட்ரா வேண்டியதுதான் என்ற காமெடியின் மூலம் பிரபலம் ஆனார். அதன் பின்பு உலகநாயகன் கமல் நடித்து வெளிவந்த வி ருமாண்டி என்ற படத்தில் பாடல் பாடியுள்ளார் .
அந்த படத்தில் இவரை நடித்து வைக்க வேண்டும் என உலகநாயகன் ஒரு பெரிய வாய்ப்பாக வி ருமாண்டி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கொடுதிர்ந்தார் . அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து நல்ல வரவேற்பை பெற்றார் . கடந்த 2006 ம் ஜூன் மாதத்தில் குஞ்சாரம்மா அணைத்து இந்திய அண்ணா தி ராவிடர் முன்னேற்ற கழகம் கட்சியில் இணைந்தார் . இவர் சிறு வயதிலே கிராமிய பாடல்களை தனது அப்புச்சிஇடம் இருந்து கற்றுகொண்டார் .
அந்த பாடல்களை பல கிராமங்களில் பாடியும் இருக்கிறார் . சமீபத்தில் ஒரு பத்திரக்கையில் அவர் கூறியதாவது நான் பாரதிராஜா படத்தில் முதலில் பாடத்தான் அழைத்தார்கள் . அதன் பின் அந்த கதாபாத்திரத்துக்கு இவர் சரியாக இருப்பார் என்று நடிக்க வைத்தார்கள் .
அதற்கு பிறகு தான் சினிமா துறையில் நான் இவ்வளோ தூரம் பயணிக்க வாய்பாக இருந்தது என்று தெரிவித்தார்.இப்படி ஒரு நிலையில் தற்போது ஒரு சில படங்களில் பின்னணி பாடகியாகவும் கு ணசித்திர வே டங்களில் நடித்தும் வருகிறார்.