பிரபல நடிகை சார்மிக்கு இத்தனை கோடி நஸ்டமாம்!

735

நடிகை சார்மி காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆனால் நடித்தது என்னவோ ஒரிரு படங்கள் தான். தெலுங்கில் பல படங்களில் நடித்துவந்த இவர் சமீபகாலமாக நடிப்பதிலிருந்து விலகினார்.

பின் படத்தயாரிப்பில் இறங்கினார். அண்மையில் அவரும் தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்தும் இணைந்து மெக்பூபா என்ற படத்தை தயாரித்தனர். பூரி தானே இப்படத்தை இயக்கியதோடு தன் மகன் ஆகாஷ் பூரியை கதாநாயகனாக்கினார். ரூ 18 கோடி செலவில் எடுக்கபட்ட இப்படம் அண்மையில் வெளியானது.

ஆனால் படம் தோல்வியை தழுவியது. இதனால் ரூ 12 கோடி நஸ்டமாம். ஏற்கனவே இயக்குனர் ஹைதராபாத்தில் உள்ள தன் வீட்டை விற்று தான் இந்த படத்தை எடுத்தாக கூறினார். இந்நிலையில் என்ன செய்வதென தெரியாமல் சார்மி பிரச்சனையில் மாட்டியுள்ளாராம்.