பிரபல நடிகை பிக்பாக்கெட் அடித்து கைது : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

245

கொல்கத்தா….

மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி 45வது சர்வதேச கொல்கத்தா புத்தகக் கண்காட்சி நடந்தது. பிரபலங்கள், மாணவர்கள், புத்தக விரும்பிகள் என ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கு விசிட் அடித்தனர். அந்த கண்காட்சிக்கு வந்திருந்த பெண் ஒருவர் அன்று இரவு ஒரு கைப்பையை அங்கிருந்த குப்பை தொட்டியில் போட்டுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த பிதாநகர் காவலர் அதை பார்த்துள்ளார். உடனே குப்பை தொட்டியை ஆய்வு செய்ததில் அந்த கைப்பைக்குள் இரண்டுக்கும் மேற்பட்ட வெவ்வேறு பர்ஸுகள் கிடந்துள்ளன. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த பெண்ணை அழைத்து, இத்தனை பர்ஸுகள் யாருடையது என்பதை குறித்து விளக்கம் கேட்டனர்.

பதில் சொல்ல முடியாமல் பிதற்றியதால் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.விசாரணையில் அவர் பெங்காலி நடிகை ரூபா தத்தா என்பது தெரிய வந்தது.

தொடர் பிக்பாக்கெட்டில் ஈடுபட்டு வந்த ரூபா தத்தாவிடம் இருந்து 65,760 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைதான ரூபா தத்தா பெங்காலி திரைப்படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.