பிரபல நடிகை மீனாட்சி கழுத்து அறுத்து கொலை: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

717

பிரபல திரைப்பட நடிகை மீனாட்சி தபா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நேபாள நடிகை மீனாட்சி கடந்த 2012-ல் அமித் ஜஸ்வால் மற்றும் ப்ரீத்தி சுரின் என இரண்டு நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

மும்பையில் நடந்த சினிமா படப்பிடிப்பில் அமித்தும், சுரினும் மீனாட்சிக்கு நட்பாகியுள்ளனர்.அப்போது அவர்களிடம், தான் வசதியான வீட்டு பெண் எனவும், பொழுதுபோக்குக்காக மட்டுமே திரைப்படங்களில் நடிப்பதாகவும் மீனாட்சி கூறியுள்ளார்.

இதையடுத்து அமித்தும், சுரினும் மீனாட்சியை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டனர்.அதன்படி புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மீனாட்சியை கோரக்பூருக்கு இருவரும் வரவழைத்துள்ளனர்.

பின்னர் மீனாட்சியின் அம்மாவுக்கு போன் செய்து தங்களுக்கு ரூ.15 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் மீனாட்சியை கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

ஆனால் மீனாட்சி அம்மாவால் ரூ.60,000 மட்டும் தயார் செய்ய முடிந்த நிலையில், ஆத்திரத்தில் மீனாட்சி தலையை வெட்டி அமித்தும், சுரினும் கொலை செய்துள்ளனர்.

பின்னர் உடலை தண்ணீர் தொட்டியிலும், பல நாட்கள் கழித்து தலையை ஓடும் பேருந்திலிருந்தும் தூக்கி வீசியுள்ளனர்.இவ்வழக்கை விசாரித்த பொலிசார் அமித்தையும், சுரினையும் கைது செய்த நிலையில் அவர்கள் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்றது வந்தது.இந்நிலையில் இருவரும் குற்றவாளி என நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.