பிரபல பாடகர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு!!

1255

பஞ்சாப்பில் பிரபல பாடகரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் பர்மிஷ் வெர்மா மற்றும் அவரது நண்பரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுள்ளனர்.

வெர்மாவின் காலில் குண்டு பாய்ந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர், Gaal ni kadni என்ற பாடல் மூலம் பிரபலமானவர் வெர்மா, இந்த பாடலை யூடியூப்பில் மட்டும் 118 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

மொஹாலி பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், Dilpreet Singh Dhahan என்பவரே வெர்மாவை சுட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏனெனில் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் கையில் துப்பாக்கியுடன் வெர்மாவின் புகைப்படத்தில் சிவப்பு நிற கோடிட்டு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.