அண்டை நாடான ஸ்பெயினின் கட்டலோனியா பகுதியில் ஒரே நாளில் ஆயிரம் பேர்களுக்கு கொரோனா உ றுதி செ ய்யப்பட்ட நி லையில், எல்லைகளை மூடுவது குறித்து விவா திக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்பெயினில் குறிப்பிட்ட பகுதியில் ஒரே நாளில் 1000 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக வெளியான தகவலின் மத்தியில்,
எ ல்லைகளை மூடுவது சா த்தியமா என்று புதிய பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் இதை மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறோம், குறிப்பாக இந்தப் பி ரச்சினையின் உண்மைத்தன்மை தொடர்பில் நாங்கள் ஸ்பெயினின் அதிகாரிகளுடனும் வி வாதிக்க வேண்டும் என்றார். இதனிடையே கட்டலோனியா பகுதியில் தி டீரென்று கொரோனா பரவல் அ திகரித்ததை அடுத்து,
பார்சிலோனாவைச் சுற்றியுள்ள நான்கு மில்லியன் மக்கள் 15 நாட்கள் வீட்டிலேயே இருக்குமாறு கோ ரிக்கை வி டுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கட்டலோனியா பகுதியில் 1226 பேர்களுக்கு கொரோனா உ றுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வெள்ளிக்கிழமையே க டுமையான ந டவடி க்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும் முழுமையான ஒரு ஊரடங்கை அமுலில் கொண்டு வருவது தொடர்பில் ஸ்பெயின் நிர்வாகத்திற்கு இருவேறான கருத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பிரான்ஸ் எல்லைகளானது சாதாரண பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பா திக்காமல் இருப்பதற்காக கடந்த ஜூன் 21 முதல் மீண்டும் தி றக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.