பிரித்தானியாவில் ஒழுக்கமற்ற நகரங்களின் பட்டியல்:

774

பிரித்தானியாவில் பாலியல் ரீதியாக ஒழுக்கமற்ற நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

குறித்த பட்டியலில் உலகப்புகழ்பெற்ற நாடக எழுத்தாளரும் கவிஞருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த இடமான Stratford-upon-Avon முதலிடத்தில் உள்ளது.

மட்டுமின்றி பிரித்தானியாவில் பாலியல் தொழில் பெருமளவு நடைபெறும் பகுதியாகவும் இது உள்ளது.

சுற்றுலாப்பயணிகளுக்கான இணையதளம் ஒன்று குறித்த ஆய்வை மேற்கொண்டு பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் பிரித்தானியாவில் உள்ள 150 நகரங்களை குறித்த ஆய்வுக்கு அந்த இணையதளம் எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த நகரங்களில் குடியிருக்கும் மக்களில் பெரும்பாலானோர் தங்கள் மனைவி அல்லது கணவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதாக தெரிய வந்துள்ளது.

Stratford-upon-Avon பகுதியில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் சுமார் 3.69 சதவிகித மக்கள் தங்கள் துணைக்கு தெரியாமல் பாலியல் உறவு வைத்துக் கொள்கின்றனர்.
இரண்டாவது இடத்தில் சேஷையரில் உள்ள வில்ம்ஸ்லோவ் பகுதி உள்ளது.

இங்குள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 901 பேர் தங்கள் துணையை வஞ்சிக்கின்றனர்.

3-வது இடத்தில் Beaconsfield பகுதி உள்ளது. இங்கு 408 பேர் தங்கள் துணைக்கு தெரியாமல் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளனர்.

4-வது இடத்தில் இர்வின் பகுதி உள்ளது. இங்குள்ள மக்கள் தொகையில் சுமார் 2.51 விழுக்காடு மக்கள் வேறு நபர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்கின்றனர்.

பிரித்தானியாவில் மிகவும் நம்பத்தன்மை வாய்ந்த மக்கள் குடியிருக்கும் பகுதியாக கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள விக்கன் தெரிவாகியுள்ளது. காரணம் இங்குள்ள 0.14 சதவிகித மக்கள் மட்டுமே தங்கள் துணைக்கு பாலியல் ரீதியாக நம்பிக்கை துரோகம் செய்கின்றனர்.

மேலும் குறித்த இணையதளம் மேற்கொண்ட ஆய்வின்படி பிரித்தானியாவில் வாரம் ஒன்றுக்கு சுமார் 20,000 மக்கள் தங்கள் துணைக்கு நம்பிக்கை துரோகம் செய்வதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பாலியல் தொடர்பான அந்த இணையதளத்தில் பதிவு செய்யும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியாவில் வீட்டு மனைகளின் விலை கட்டுக்கடங்காத அளவுக்கு உயர்ந்துள்ளதே, இப்பகுதி மக்கள் வேறு நகரங்கள் நோக்கி நகராததும், ஒழுக்கமற்ற பாலியல் உறவுகள் அதிகரிக்க காரணமாகவும் அமைகிறது என்றார் பெண்மணி ஒருவர்.

ஒழுக்கமற்ற 10 நகரங்கள்:

Stratford-upon-Avon 1,047 (3.69% of population).
Wilmslow 901 (3.6% of population).
Beaconsfield 408 (3.4% of population).
Irvine 1,782 (2.51% of population).
Windsor 2,915 (2.08% of population).
Royal Tunbridge Wells 1,151 (2.06% of population).
Beeston 925 (2.06% of population).
Pontypridd 550 (2.06% of population).
Taunton 1,193 (1.97% of population).
Esher 475 (1.9% of population).