பிரித்தானியாவில் பட்டப் பகலில் 4 பேர் கொண்ட கும்பல் செய்த துணிகர சம்பவம்! கமெராவில் சிக்கிய பரபரப்பு காட்சிகள்!!

438

 கொள்ளை சம்பவம்……..

பிரித்தானியாவில் பட்டப்பகலில் கடை ஒன்றின் உள்ளே நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Essex நகரின் Southend-on-Sea பகுதியின் லண்டன் சாலையில் இருக்கும் Currys store(கம்ப்யூட்டர், டேப்லட் போன்றவை விற்பனை செய்யும் கடை) நேற்று பிற்பகல் உள்ளுர் நேரப்படி 2.22 மணியளவில் முகமூடிகள் அணிந்த படி உள்ளே நுழைந்த சுமார் நான்கு பேர் கொண்ட கும்பல், கடையின் உள்ளே இருக்கும் பொருட்களை சேதப்படுத்ததுடன், சில பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் வாடிக்கையாளர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். அதில், உள்ளே நுழைந்த குறித்த நபர்கள் சில நிமிடங்களில் கடைகளில் இருக்கும் டேப்லட், கம்ப்யூட்டர், மொபைல் பொருள் தொடர்பான பொருட்களை எடுப்பது போன்று தெரிகிறது.

இது குறித்து அந்த கடையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, தற்போது வழக்கம் போல் கடை திறக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Essex பொலிஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், லண்டன் சாலையில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் உடனடியாக வெளியே சென்றவுடன் சில்வர் நிற கார் ஒன்றில் சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக யாருக்கேனும் எந்த ஒரு தகவல் தெரிந்தாலோ, சரியான வீடியோ கிளிப் இருந்தால், காவல்துறைக்கு கொடுத்து உதவும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.