பிரித்தானிய இளவரசி கேட்டை காப்பியடித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியின் மகள்!!

728

பிரித்தானிய இளவரசி டயானாவுக்கு அடுத்து பிரபலமானவர் இளவரசி கேட்தான் என்பதை மறுக்கமுடியாதுதான், அதற்காக இன்னொரு பிரபலமான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனின் மகளான செல்ஷியே கேட்டை காப்பியடித்திருக்கிறார் என்பதை அறியும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

பிரபல பத்திரிகையாளர் Amy Chozick என்பவர் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.செல்ஷியா தனக்கு முதல் குழந்தை பிறக்கும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு பிரித்தானிய இளவரசி கேட்டை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டார் என்று அந்த புத்தகம் கூறுகிறது.

செல்ஷியும் அவரது உதவியாளர்களும் 2013 ஆம் ஆண்டு இளவரசர் ஜார்ஜ் பிறந்தபோது கேட் எப்படி நடந்துகொண்டார் என்பதைக் கற்று (ஒரு ஆண்டுக்குப் பின் பிறந்த) செல்ஷியின் குழந்தைக்காக ஆயத்தமானார்கள் என்று அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரியின் ஒரே மகளான செல்ஷியும் அவரது பணியாளர்களும் கேட் எப்படி நடந்துகொண்டார், பத்திரிகையாளர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதைக் கவனித்து அதைத் தங்களுக்கு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டார்கள்.

செல்ஷி தன்னை இளவரசி கேட்டுக்கு சமமாகப் பார்த்ததாகவும் கிளிண்டன் குடும்பத்தை பிரித்தானிய ராஜ குடும்பத்திற்கு இணையாகவும் கருதியதாக அந்த புத்தகம் கூறுகிறது.புகைப்படங்களைப் பார்க்கும்போதும் செல்ஷி இளவரசி கேட்டைப் போலவே போஸ் கொடுக்க முயன்றிருப்பதைக் காணலாம்.