அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போன்று, அளவுக்கு மீறிய அன்பும் சில நேரங்களில் ஆபத்தை உண்டாக்கும்.
டெல்லியில் தனது தோழி தன்னை விட்டு பிரிந்துசென்ற காரணத்தால் அவர் மீது ஆசிட்டை ஊற்றியுள்ளார் சக தோழி. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 24 வயதுடைய இரண்டு தோழிகளும் விடுதியின் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளனர்.
இதில், வேறு ஒருவருக்கு மாற்று வேலை கிடைத்து காரணத்தால், தங்கியிருந்த இடத்த விட்டு வேறு இடத்திற்கு மாற முடிவு செய்துள்ளார், இதனை தாங்கி கொள்ள முடியாத சக தோழி, அவரை தடுத்து பார்த்துள்ளார்.
இருப்பினும், தோழி மறுப்பு தெரிவிக்கவே, கோபம் கொண்ட சக தோழி ஆசிட்டை எடுத்து அவர் மீது ஊற்றியுள்ளார். இதில் அவரது கழுத்து மற்றும் கையில் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.