‘பிரீபயர்’ விளையாடி கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென நடந்த பயங்கரம் : அதிர்ந்துபோன குடும்பம்!!

250

திருப்பூர்…

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கண்ணன், தினேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி மூடப்பட்டதால் கண்ணன் வீட்டிற்கு வந்துவிட்டான்.

அதன் பின் கண்ணன் பள்ளிக்குச் செல்லவில்லை. இதற்கிடையே கண்ணன் தான் வீட்டில் இருக்கும்போது செல்போனில் ‘பிரீபயர்’ விளையாடி வந்துள்ளான். இந்நிலையில் செல்போனில் கண்ணன் ‘பிரீபயர்’ விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அவருடைய தம்பி தினேஷ் அருகில் அமர்ந்திருந்தான். அப்போது கண்ணன் திடீரென தனது தம்பியிடம் செல்போனை கொடுத்து விட்டு மற்றொரு அறைக்கு சென்றுள்ளான்.

அதன் பின் நீண்ட நேரமாகியும் கண்ணன் அறையை விட்டு வெளியே வரவில்லை. இந்நிலையில் சுதா தனது மகனைத் தேடினார்.

அப்போது வீட்டில் உள்ள மற்றொரு அறையில் பார்த்தபோது கண்ணன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து சுதா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கன்னணனை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் கன்னணனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெருமாநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவன் கண்ணனின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணவன் ‘பிரீபயர்’ விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்ற மன அழுத்தத்துடன் தற்கொலை செய்து கொண்டானா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.