பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? முகம் பார்த்தே முடிவு செய்வோமா??

1155

தாய்மை அடைந்துள்ள ஒவ்வொரு தாய் மற்றும் தந்தையின் முதல் எதிர்பார்ப்பு தனக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிவது தான்.ஸ்கேன் செய்யும் வசதிகள் இல்லாத அந்தக் கால கட்டத்திலும் தாய்மை அடைந்திருக்கும் பெண்ணின் முகம் பார்த்தும் உடலில் உள்ள சில மாற்றங்கள் வைத்தும் பிறக்க போவது ஆணா பெண்ணா என்பதை நமது முன்னோர்கள் சொல்வது வழக்கம்.

முகம்:ஏழு மாதக் கருவை சுமந்திருக்கும் பெண்களில் சிலர் முகம் பொலிவாகவும் மஞ்சள் பூசினது போன்ற அழகையும் மினுமினுப்பையும் தரும்.முகம் அவ்வாறு பொலிவாக இருந்தால் வயிற்றில் குழந்தை உள்ள பெண் குழந்தை எனவும் முகம் இயல்பாக சாதாரணமாக காணப்பட்டால் ஆண் குழந்தை எனவும் கணிக்கின்றனர் நம் முன்னோர்.

சருமம்:சருமம் வறட்சியாக இருப்பின் அவர்கள் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கப் போகின்றார்கள் என்று அர்த்தம்.மாறாக அவர்கள் சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் காணப்பட்டால் பெண் குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறார்கள் என்று அர்த்தம்.

மார்பகங்கள்:வழக்கமாக பெண்களுக்கு மார்பகங்கள் ஒன்று சிறிதாகவும், இன்னொன்று பெரிதாகவும் காணப்படும்.கருவுற்றிருக்கும்போது வலது மார்பகம் பெரிதாகக் காணப்பட்டால் கருவில் இருப்பது ஆண் குழந்தை எனவும் இடது மார்பகம் பெரிதாகக் காணப்பட்டால் கருவில் இருப்பது பெண் குழந்தை எனவும் ஊகிக்க முடியும்.

தலைமுடி:தலைமுடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் காணப்பட்டால் அவர்கள் ஆண்குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், நேர்மாறாக தலைமுடி வறட்சியாக இருந்தாலும் முடி உதிர்தல் அதிகரித்தாலும் பெண் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அர்த்தம்.

உடலில் உள்ள முடிகள்:கருவை சுமப்பவர்கள் உடலில் உள்ள முடிகள் வேகமாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்தால் அவர்கள் ஆண் மகனுக்குத் தாயாகப் போகிறார்கள்.உடலில் உள்ள முடிகள் வளர்வது உதிர்ந்தாலோ குறைந்தாலோ அவர்கள் பெண்மகளைப் பெற்றெடுப்பார்கள்.