பிறக்கும் முன்பே குழந்தையை தத்துக்கொடுத்த பெண் : மனதை நெகிழ வைக்கும் சம்பவம்!!

535

தான் கர்ப்பிணியாக இருக்கும் போதே தனது குழந்தையை தத்துக் கொடுத்துவிட்டு குழந்தை பிறந்தபின் அதைப் பிரிய மனமில்லாத தாய் தத்தெடுத்த தாயுடனேயே சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் Atlantaவிலிருந்து Raleigh செல்லும் அந்த விமானத்தில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் வந்து அமர்ந்தார், அவர் பெயர் Samantha Snipes. அவர் மிகவும் குழப்பத்துடனும் படபடப்புடனும் காணப்பட்டதைக் கண்ட அவருக்கு அருகில் அமர்ந்திருந்த Temple Phipps என்னும் பெண் அவரிடம் பேச்சுக் கொடுக்க தான் தனது கணவரிடமிருந்து கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகி தனியே வருவதாகவும், தனக்கு குழந்தை பிறந்தபின் அந்தக் குழந்தையைத் தத்துக்கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார் Samantha. அதைக் கேட்டதும் Temple Phippsஇன் மனதில் ஆயிரம் எண்ணங்கள்.

42 வயதாகும் அவர் முன்பு திருமணம் செய்திருந்தாலும் திருமண வாழ்வு இனிக்கவில்லை, குழந்தைகள் என்றால் அலாதிபிரியம் உடைய அவருக்கு குழந்தையும் பிறக்கவில்லை.

Samantha தனது குழந்தையை தத்துக் கொடுக்க இருப்பதாக கூறியதும் தான் அந்த குழந்தையை கேட்கலாமா என்று எண்ணியவர் தயக்கத்துடன், தனது போன் நம்பரை அவரிடம் கொடுத்துவிட்டு ஏதாவது உதவி வேண்டுமென்றால் தன்னை அழைக்குமாறு கூற, பயண முடிவில் இருவரும் பிரிந்தனர்.

மூன்று நாட்களுக்குப்பின் Phippsக்கு ஒரு போன் கால் வந்தது. பிளேனில் சந்தித்தோமே அந்த சமந்தா பேசுகிறேன் என்று அந்தக் குரல் கூறியதும் ஏதாவது பிரச்சினையா என்று Phipps கேட்க எனக்கு குழந்தை பிறந்து விட்டது, எங்களை வந்து பார்க்க முடியுமா என்று கேட்டதும் Phippsக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. உடனே Samantha இருந்த மருத்துவமனைக்கு புறப்பட்டு விட்டார் அவர். குழந்தையைப் பார்த்தார் Phipps. மனமெல்லாம் ஒரே படபடப்பு.

சரியாக அந்த நேரம் பார்த்து என் குழந்தையை தத்தெடுத்துக் கொள்கிறீர்களா என்று Samantha கேட்கவும் உடனே தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்த Phippsக்கு உதடுகள் நடுங்கின. வார்த்தை வரவில்லை.

குழந்தை கையில் எடுத்தார் Phipps, குழந்தை அவருடன் ஒட்டிக்கொண்டான், அவருக்கு ஒரே சந்தோஷம். குழந்தையை கொடுக்க சம்மதித்து விட்டலும் இப்போது Samanthaவுக்கு லேசாக பயம் வந்தது.

முறைப்படி குழந்தையை தத்தெடுத்துக் கொண்டார் Phipps, அவனது தாயையும் அவர் விட்டு விடவில்லை, வட கரோலினாவுக்கே வந்து விட்டார் Samantha. இப்போது மூன்றுபேரும் சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்கிறார்கள்.

தங்கள் சந்திப்பைக் குறித்து இருவரும் சேர்ந்து ஒரு புத்தகம் எழுத இருக்கிறார்கள். நாங்கள் குடும்பமாக வாழ வேண்டும் என்பது ஆண்டவன் எடுத்த முடிவு என்கிறார்கள் இருவரும்.