பிளாஸ்டிக் இல்லாத Tea பையை அறிமுகப்படுத்திய அசாம் இளைஞர்கள்!

572

தேநீர் பை…….

உலகம் முழுவதும் இன்று நெகிழியின் (Plastic) பயன்பாடு மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. பல நாடுகள் நெகிழியின் பயன்பாட்டை குறைக்கவும், தடை செய்யவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த உபமன்யு – ஆஷுமான் என்கிற இரு நண்பர்கள் மக்கும் தன்மை கொண்ட நெகிழி இல்லா தேநீர் பையை (Tea Tag or Tea Bag) அறிமுகப்படுத்தியுள்ளனர்.

வழக்கமாக நாம் பயன்படுத்தும் தேநீர் பை சிறிய அளவிலான நெகிழியால் கட்டப்பட்டிருக்கும். ஆனால் இந்த நெகிழி இல்லா தேநீர் பையில் நெகிழிக்கு பதில் இலைகளால் கட்டப்பட்டிருக்கும். உருளை வடிவில் இலைகளை மடக்கி, இயற்கையான முறையில் கிடைக்கும் பஞ்சினால் கட்டி, முழுக்க முழுக்க நெகிழி இல்லாமல் இயற்கையான தேநீர் பையாக நமக்கு கிடைக்கிறது. இதனை பயன்படுத்துவதன் மூலம் நாம் அருந்தும் ஒவ்வொரு துளி தேநீரும் நூறு சதவீதம் பாதுகாப்பானதாக இருப்பதாக சொல்கின்றனர். மேலும் இது சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இதனால் நெகிழியின் பயன்பாடு குறைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்த வாய்ப்புள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக நெகிழி இல்லா தேநீர் பை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.