பீரியட்ஸ் பற்றி பாடம் எடுத்ததால் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த சிறுமி : நேர்ந்த கொடுமை!!

282

கேரளா…..

கேரளா மாநிலம் கொச்சியில் மதரசா பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை அன்று உயிரியல் ஆசிரியர் 8 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்தார்.

அப்போது, மாதவிடாய் பற்றி விளக்கி கொண்டிருந்தவர் பெண்கள் கருவுற்றால் மாதவிடாய் சரிவர ஆகாமல் இருக்கும் என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த 8 ஆம் வகுப்பு மாணவி, வகுப்பு முடிந்ததும் தனது தோழியிடம் ‘ எனக்கும் மாதவிடாய் சில மாதங்களாக ஆகவில்லை’ என கூறியுள்ளார்.

உடனே அந்த மாணவி இதுகுறித்து உயிரியல் ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். அந்த ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்ததையடுத்து சைல்டு ஹெல்ப் லைனுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சைல்டு ஹெல்ப்லைனில் இருந்து வந்தவர்கள் சிறுமிக்கு கவுன்சலிங் கொடுத்தபோது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதே பள்ளியில் திண்டுக்கல்லை சேர்ந்த ஷரபுதீன் (27 வயது) என்பவர் ஆசிரியர்களுக்கு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர், 13 வயதாகும் அந்த 8 ஆம் வகுப்பு சிறுமியிடம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். அது நெருக்கமான பின்னர்,

தொந்தரவு இல்லாமல் சந்தித்துக்கொள்வோம் என கூறி சிறுமியை தினமும் பள்ளிக்கு சீக்கிரமாக வரவழைத்துள்ளார். அதன்படி, சிறுமி வந்தபோதெல்லாம் ஆசை வார்த்தை கூறி ஷரபுதீன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த சம்பவத்தில் ஷரபுதீன் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகள் தடியிட்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் ஷரபுதீன் கைது செய்யப்பட்டார்.

சிறுமிக்கு களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ உதவி தரப்பட்டு வருகிறது. ஷரபுதீன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் டிஎன்ஏ பரிசோதனைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.