தமிழகத்தில்..
தமிழகத்தில் புதையல் எடுக்க சென்ற ஒரே குடும்பத்தினரில் இரண்டு பேர் உ.யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவர் தனது மகன்களான சிவவேலன், சிவமாலை ஆகியோருடன் ஒரே வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது வீட்டுக்கு பின்புறம் இருக்கும் காலி மனையில் புதையல் இருப்பதாக சிலர் கூறியுள்ளனர். இதனை நம்பிய முத்தையா குடும்பத்தினர் ஊர் மக்களுக்கு தெரியாமல் வீட்டின் பின்புற புதையலை தேடி சுரங்கம் தோண்ட ஆரம்பித்துள்ளார். 50 அடிக்கு மேல் ரகசியமாக சுரங்கம் தோண்டியுள்ளனர்.
அதன் படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முத்தையா குடும்பத்தினருடன் மேலும் இருவர் ரகுபதி, நிர்மல் இருவரும் இணைந்துள்ளனர். இதையடுத்து, நேற்று மாலை சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக முத்தையாவின் மருமகள் சுரங்கம் அருகே சென்றுள்ளார்.
அப்போது அங்கு ஒருவிதமான வாசணை வருவதை உணர்ந்த அவர், சுரங்கம் அருகில் செல்ல முயன்ற போது, அவருக்கு மயக்கம் ஏற்படுவது போல் இருந்துள்ளது. இதனால் உடனடியாக அங்கிருந்து சென்று அக்கம் பக்கத்தினரிடம் விஷயத்தை கூறியுள்ளார்.
இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் அங்கு விரைந்துள்ளனர், அப்போது அங்கு பொலிசார் நடத்திய வி.சாரணையில்,புதையலுக்கு ஆசைப்பட்டு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டதை முத்தையா குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுரங்கத்தில் இருந்து விஷவாயு வெளியேறுவதை உறுதிசெய்தனர். நீண்ட நேர போ.ராட்டத்துக்கு பின்னர் சுரங்கத்தில் இருந்த 4 பேரையும் மீட்டனர்.
சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரகுபதி, நிர்மல் உயிரிழந்தனர். சிவவேலன், சிவமாலை இருவரும் உ.யிருக்கு ஆ.பத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக முத்தையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.