புளித்து போன மூன்று திருமணங்கள் : 4வது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!

320

டாக்ஸி டிரைவர்…..

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை கொலை செய்த டாக்ஸி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்குவங்காளத்தை சேர்ந்த டாக்ஸி டிரைவரான இஸ்லாமிற்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் இவர் தற்போது தனது மூன்றாவது மனைவியுடன் ஹரியான மாநிலத்தில் உள்ள குருகிராம் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான நர்ஹிஸ் ஹடூன் என்ற இளம்பெண்ணோடு அவர் பழகி வந்துள்ளார்.

இது காதாலாக மாறிய நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பால் வாங்குவதற்காக சென்ற நர்ஹிஸ் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் நர்ஹிஸை தேடும் பணியில் ஈடுப்பட்டு வந்த போது, நர்ஹிஸ் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தததில் அவர் கடைசியாக ஒரு டாக்சியில் ஏறிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதன்படியில் விசாரணை நடத்தியதில், டாக்சி ஓட்டிச் சென்றது இஸ்லாம் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் முற்பட்ட நிலையில் அவர் அந்த கிராமத்தை விட்டு தப்பி ஓடினார். தப்பி சென்ற இஸ்லாமை பிடிக்க காவல் துறை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்..

இந்நிலையில் இந்திய வங்காளதேசத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், நர்ஹிஸிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அவரை கொலை செய்ததாகவும், பின்னர் அக்கிராமத்தில் இருந்து தப்பித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து போலீசார் இஸ்லாமிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.