பூமியில் விழுந்த எரிநட்சத்திரம்: முழுக்க முழுக்க வைரமாக மாறிய அதிசயம்!

799

சூடான் நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்த எரிநட்சத்திரம் ஒன்றில், முழுக்க முழுக்க வைரம் இருந்துள்ளது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.சூடானில் உள்ள நுபியன் பாலைவனத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு எரிநட்சத்திரம் ஒன்று விழுந்தது.

ஆல்மஹாட்ட சிட்டா என்று பெயர் வைக்கப்பட்ட இந்த எரிநட்சத்திரம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சூடானின் ‘கார்ட்டோம்’ பல்கலைக்கழக மாணவர்களால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.இந்நிலையில், இந்த எரிநட்சத்திரத்தின் உடற்பகுதி முழுவதும் வைரம் நிரம்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரகற்கள், எரிநட்சத்திரம் வெடித்த போது உருவாகி இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.ஆனால், அதற்கு முன்பாகவே ஆல்மஹாட்ட சிட்டவில் வைரம் இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் உள்ள வைரம் மிகவும் தூய்மையானது என்றும், எந்தவிதமான அசுத்தமும் இதனுடன் கலக்கவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து கூறுகையில், இந்த வைரம் பூமி உருவாவதற்கு முன்பு தோன்றியிருக்கலாம்.அதன்படி, நட்சத்திரங்கள் மோதி சூரிய குடும்பம் உருவான அதே வேளையில், ஆல்மஹாட்டா சிட்டா எரிநட்சத்திரமும் உருவாகி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.